ஐயப்பா சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு வீதி உலா
ADDED :3322 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகர் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், லட்சார்ச்சனை மற்றும் அன்னதான விழா, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ் தலைமையில் நடந்தது. தஞ்சை ராமகிருஷ்ணா விவேகானந்த சேவாஸ்ரம தலைவர் கிருஷ்ணானந்த் மகராஜ் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார். இன்று, தொண்டர் படை அணி வகுப்பு நடக்கிறது. ஐயப்பன் சுவாமி வீதி உலாவுடன், 3,000 பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தியவாறு உலா வருகின்றனர். இதேபோல், பரமத்தி கோதண்டராமர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஐயப்பனுக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.