உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் பாலாபிஷேகம்

சென்னிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் பாலாபிஷேகம்

சென்னிமலை: சென்னிமலை, ஐயப்பா நகரில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, பாலாபிஷேக விழா நடக்கிறது. எட்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள், கோவிலில் இருந்து, பால் குடங்களுடன் புறப்பட்டு, மேள தாளங்களுடன் நான்கு ராஜ வீதிகளிலும் ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், ஐயப்பன் கோவில் சென்றனர். இதை தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !