மூவேந்திர ஈஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை முற்றோதுதல்
ADDED :3251 days ago
பவானி: மூவேந்திர ஈஸ்வரர் கோவிலில், ஞாலம் அளந்த பன்னிரு திருமுறை முற்றோதுதல் விழா நடந்தது. பவானி, நசியனூரில், பழமை வாய்ந்த முத்து மரகதவல்லியம்மை உடனமர் மூவேந்திர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணிவரை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று, 12வது மாத நிகழ்ச்சியாக, ஓதுவார் மூர்த்தி மற்றும் சுவாமி அரிகரதேசிகர் ஆகியோர், திருப்பதிக பாடல்கள் பாடி, வழிபாடு மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருமுறை திருக்காவணம் சிவனடியார்கள் மற்றும் நசியனூர் ஏழுகுல காணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள், 1,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.