உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி பூப்பிரதட்சணம்: டிச.21ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்

அஷ்டமி பூப்பிரதட்சணம்: டிச.21ல் ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்

ராமேஸ்வரம்: அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் (டிச.21ல்) நடை சாத்தப்படும், என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது:  டிச.21  அஷ்டமி பூப்பிரதட்சணம் என்பதால் ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து காலை பூஜைகள் நடக்கிறது. பின் காலை 6:00 க்கு நடை சாத்தப்பட்டு சுவாமி, பர்தவர்த்தினி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் கோயில் ரதவீதியில் உலா வருகின்றனர். அப்போது, வழி நெடுகிலும் பக்தர்கள், ஜீவராசிகளுக்கு சுவாமி படியளித்தல் (உணவு வழங்குதல்) நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சுவாமி, பஞ்சமூர்த்தியுடன் கோயிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்படும். எனவே, காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் கோயிலில் புனித நீராட, தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும், என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !