உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோவிலில் நாளை நடை அடைப்பு

ராமேஸ்வரம் கோவிலில் நாளை நடை அடைப்பு

ராமேஸ்வரம்: அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை  நடை அடைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கோவில் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாளை அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில், இரவு, 2:00 மணிக்கு நடை திறந்து காலை பூஜைகள் நடக்கின்றன. பின் காலை, 6:00க்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் கோவில் ரத வீதியில் உலா வருகின்றனர். அப்போது, வழி நெடுகிலும் சுவாமி படியளித்தல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு சுவாமி, பஞ்சமூர்த்தியுடன் கோவிலுக்கு திரும்பியதும் நடை திறக்கப்படும். எனவே, காலை, 6:00 முதல், மதியம் 12:00 மணி வரை, பக்தர்கள் கோவிலில் புனித நீராடுதல், தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !