ஆதிபராசக்தி மன்ற விளக்கு வேள்வி பூஜை
ADDED :3253 days ago
சிதம்பரம்: ஆதிபராசக்தி மன்ற கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. சிதம்பரம், அண்ணாமலை நகர் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றத்தில் உலக நன்மைக்காக கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு வழிபாடு செய்து வேள்வியை துவக்கி வைத்தார். தொடர்ந்து வழிபாட்டு மன்ற பெண்கள் சிறப்பு வேள்வி நடத்தினர். பின்னர், ஏழைகளுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது. பூஜையில், மன்ற நிர்வாகி முத்தையன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அ.தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், நிர்வாகிகள் பாலகுமார், பிரபாகரன், சரஸ்வதி, லதா, கலாவதி, காளிமுத்து பங்கேற்றனர்.