திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு
ADDED :3254 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிச.,17ல் காப்பு கட்டுடன் துவங்கிய எண்ணெய் காப்பு திருவிழாவில் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்றுமுறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டு, அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், மைஇட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று பூஜைகள் முடிந்து அம்மன் மட்டும் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சியில் எழுந்தருளினார்.