குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலில் தைல காப்பு தரிசனம்
ADDED :3253 days ago
குருவித்துறை: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலில் சுவாமிக்கு தைலகாப்பு நடந்தது. இக்கோயிலில் ஒரே சந்தன மரத்தால் 7 அடி உயரத்தில் சுயம்பு மூலவராக ஸ்ரீதேவி, பூதேவியர் வல்லபபெருமாள் சுவாமி அருள்பாலிக்கிறார். தீபாவளி முதல் தைலகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், சுவாமி 48 நாட்களில் பூஜை செய்தால் சகல நன்மையும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஜன.,8ல் தைலகாப்பு அலங்காரம் கலைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்து வருகிறார்.