உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை- 7: உப்பு நீரில் நல்ல தண்ணீர்

கிறிஸ்துமஸ் சிந்தனை- 7: உப்பு நீரில் நல்ல தண்ணீர்

எல்லாருக்கும் ஏதோ ஒரு திறமையை ஆண்டவர் அருளியிருக்கிறார். ஆனால், தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை இன்னதென அறியாமல் பலர் வருத்தத்தில் இருக்கின்றனர். இவர்கள் திறமைசாலிகளைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையால் பொறாமைப்படுகின்றனர்.ஒரு படகு கடலில் புயலில் சிக்கி திசை மாறி சென்று விட்டது. படகோட்டிகளுக்கு கடும் களைப்பால் தாகம் வாட்டியது. அப்போது எதிரே ஒரு படகு வர தண்ணீர் கேட்பதற்காக வெள்ளைக் கொடியை வீசி அழைத்தனர். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்கள் நிலையைச் சொல்லி, படகோட்டிகள் தண்ணீர் கேட்டனர்.“நண்பர்களே! நீங்கள் கடலில் தான் செல்கிறீர்கள்.ஆனால், நீங்கள் இப்போது இருப்பதோ கடலுக்குள் பாயும் அமேசான் நதிக்குள். இது நல்ல தண்ணீர். நீங்கள் வேண்டுமளவு நல்ல தண்ணீர் குடிக்கலாமே!”என்றனர்.கடலுக்குள் பயணித்தாலும் அதற்குள்ளும் நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு விபரம் தெரியவில்லை. இதுபோல், நமக்குள் பல திறமைகள் இருந்தும் நாமே அதனை உணர்வதில்லை.நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்பதையும், தேவனுடைய ஆவி உங்களில் வாசம் செய்கிறது என்பதையும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.“இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயி ருக்கிறவனின் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீருக்குள்ள நதிகள் ஓடும்,” என்று பைபிளில் (யோவான் 7: 38) குறிப்பிட்டுள்ளதைப் படியுங்கள். திறமைகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !