உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

ஊட்டி : ஊட்டி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை கலைவாணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, பாஸ்டர் டேனியல் சிங் பங்கேற்றார். விழாவில், பள்ளிக் குழந்தைகள் ஆடல், பாடல் மூலம், கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிகளை ஆசிரியை பிரியா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் தனசிங் இஸ்ரேல், இயக்குனர்கள் சார்லஸ், பிரபுகுமார், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். ஒய்.எம்.சி.ஏ., செயலாளர் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். அதேபோன்று, ஊட்டி புனித மேரிஸ் பிரேபரேட்டரி பள்ளி குழந்தைகள், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியை ஆஷா தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !