சங்கமேஸ்வரர் கோவிலில் திறந்து கிடக்கும் மின் பெட்டி
ADDED :3255 days ago
பவானி: சங்கமேஸ்வரர் கோவில் வளாக பூங்காவில், திறந்து கிடக்கும் மின்சாதன பெட்டியில், அபாயம் ஏற்பட்டுள்ளது. பவானியில், வேத நாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்னால் சில ஆண்டுகளுக்கு முன், பக்தர்களின் பொழுது போக்குக்கு, அழகிய பூங்கா அமைக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவிலான, மின் சாதனப் பெட்டி வைக்கப்பட்டு, பூங்காவின் பல பகுதிக்கு மின்சாரம் சென்றது. தற்போது பூங்கா செயலிழந்து காணப்படுகிறது. மின் சாதன பெட்டி, பராமரிப்பின்றி திறந்து கிடக்கிறது. கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.