மாட்டு வண்டியில் ஆன்மிக யாத்திரை
ராமேஸ்வரம்: குஜராத்தில் இருந்து மாட்டு வண்டியில் ஆன்மிக யாத்திரை புறப்பட்ட குழுவினர் ராமேஸ்வரம் வந்தனர். அகில இந்திய இஸ்கான் யாத்திரை குழு சார்பில் பகவான் கிருஷ்ணர் பக்தி லீலைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து ஆச்சாரியாதாஸ் தலைமையில் மாட்டு வண்டியில் புறப்பட்ட பாதயாத்திரை குழவினர் 20 பேர் புறப்பட்டனர். ஸ்ரீ கிருஷ்ணர், பலராமன் சிலைகளுடன் நவ.,2ல் புறப்பட்ட இக்குழுவினர் உ.பி., மகாராஷ்டிரா, ஓடிசா, ஆந்திரா வழியாக சென்னை, மதுரை வந்து ராமேஸ்வரம் வந்தனர். வழியெங்கும் பொதுமக்களை சந்தித்து யாத்திரை குழுவினர் ராமாயணம், பகவத் கீதை புத்தகங்கள் விற்பனை செய்து இறைவழிபாட்டை வலியுறுத்தினர். இரண்டு நாட்கள் தங்கி ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்ட பின் இங்கிருந்து இன்று புறப்படும் இக்குழுவினர் கன்னியாகுமரி, கொச்சின், கர்நாடகா, கோவா வழியாக 8 ஆயிரம் கி.மீ., துாரம் கடந்து ஜனவரி இறுதியில் துவாரகா திரும்புகின்றனர்.