ஆண்டிபட்டி கோயிலில் மார்கழி உற்சவம் துவக்கம்
ADDED :3323 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி நன்மை தருவார் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி, 49 அடி உயர மாகாளியம்மன், குருபகவான் கோயில் மார்கழி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு,சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. டிச., 26ல் ஐயப்பசுவாமிக்கு ஆயிரத்தெட்டு பூஜை, குருபகவான் குபேர பூஜை, 49 அடி மாகாளியம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம், படி பூஜை மற்றும் விளக்கு பூஜைகளுடன், ஐயப்ப சுவாமி பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.