தினமலர் செய்தி எதிரொலி: கோவில் தேர் கூரை சீரமைப்பு
ADDED :3324 days ago
காஞ்சிபுரம்: நமது தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வரதராஜ பெருமாள் கோவில் தேர் கூரை சரி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘வர்தா புயல் ஏற்படுத்திய தாக்கத்தில், காந்தி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வரதராஜ பெருமாள் கோவில் தேரின் மீதிருந்த கூரை பெயர்ந்தது. அபாய நிலையில் இருந்த கூரை குறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சேதமடைந்த தேரின் கூரையை சரிசெய்யும் பணி துவங்கியுள்ளது.