திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் படியளக்கும் நிகழ்ச்சி
ADDED :3255 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமி அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். அதன்படி சுவாமி காளஹஸ்தீஸ்வரர், பிரியாவிடை, ஞானாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.