சக்தி விநாயகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :5118 days ago
கடலூர் : வண்ணாரப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கடலூர், வண்ணாரப்பாளையம் கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. சக்தி விநாயகர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் அண்ணாதுரை, சாம்பசிவம், சிவப்பிரகாசம், சேதுராமன், தெய்வசிகாமணி, ராஜமச்சேந்திர சோழன் ஆகியோர் செய்திருந்தனர்.