உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணப்பாடி அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை

காணப்பாடி அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை

வடமதுரை : வடமதுரை அருகேயுள்ள காணப்பாடி அய்யப்பன் கோயிலில் 28ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னதானமும், குத்து விளக்கு பூஜையும் நடந்தது. இதில் காணப்பாடி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை கோயில் குருசாமி நடராஜன், நிர்வாகி சுப்பையா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !