ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபம்
ADDED :3255 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 28ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 29ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 7ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 8ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்படுகிறது. 9-ம் தேதி முதல் 17ம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.