உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம்: கரூர் ஐயப்பா சேவா சங்கம் ஏற்பாடு

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம்: கரூர் ஐயப்பா சேவா சங்கம் ஏற்பாடு

கரூர்: கரூர், பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், கோ, கஜ, அசுவமேத பூஜை மற்றும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது. 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர ஹோமம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை குபேர லட்சுமி ஹோமம், கஜபூஜை, கோபூஜை, அசுவபூஜை, கன்யா பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 24 மற்றும் 25ல், பசுபதி ஆஞ்சநேயர் சன்னதி முன் சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. 26 காலை, 6:00 மணிக்கு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் ஏந்தி, பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். 9:00 மணிக்கு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில், ஆன்மிகம் தழைக்க பெரிதும் துணை நிற்பது பக்தி நெறியா? தொண்டு நெறியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !