திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கம்
ADDED :3255 days ago
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திற்காக மலை உச்சிக்கு எடுத்துச்
செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை, மலையிலிருந்து காலை இறக்கப்பட்டது. பக்தர்கள்
வழிபாட்டிற்காக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
கார்த்திகை தீப விழாவில் 10வது நாளில் 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார்
மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் தீபம் எரிந்தது.
நேற்று இரவுடன் நிறைவுற்றது. இந்நிலையில் இன்று காலையில் மகாதீபத்தின்
ராட்சதகொப்பரையை இருபுறமும் கயிற்றால் கம்புகளை கட்டி தோளில் சுமந்து
மலையில் இருந்து இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில்
வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது.