அய்யனார் கோயில் மண்டலாபிஷேகம்
ADDED :3255 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உடைச்சியார்வலசை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நவ., 11ல் நடந்தது. தினமும் சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு 48ம் நாள் மண்டலாபிஷேகம் நேற்று நடந்தது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் நிறுவனர் மோகன் துவக்கி வைத்தார். உடைச்சியார்வலசை, வழுதுார், மொட்டையன்வலசை, ஏந்தல் பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.