வரும் 29ல் கொண்டத்து வீர பத்திரகாளியம்மன் குண்டம் விழா
திருப்பூர் : திருப்பூர், மேட்டுபாளையம் கொண்டத்து வீர பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வரும், 29ல் நடக்கிறது. மேட்டுப்பாளையம், ராமையா காலனியில் உள்ள கொண்டத்து வீரபத்திர காளியம்மன் கோவிலில், மாவட்டத்தில் அதிகபட்சமாக, 50 அடி உயரத்தில், 30 அடி உயர சிம்ம வாகனத்தில், அம்மன் வீற்றிருக்கிறார். இக்கோவிலின், 30ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 19ல், கணபதிஹோமத்துடன் துவங்கியது. கொடியேற்றப்பட்டு, அம்மன் திருவீதி உலா, சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம், தனலட்சுமி, மீனாட்சி, கருமாரியம்மன் என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நாளை காலை, முரசன் சாமிக்கு <வஸ்திரம், மாலை அணிவிக்கப்படுகிறது. வீரபத்திரகாளியம்மனுக்கும், சிம்ம வாகனத்துக்கும் கனி மற்றும் பூ மாலை அணிவிக்கப்படுகிறது. வரும், 29ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.