விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
குமாரபாளையம்: குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில், 9ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. சுவாமிக்கு, வெண்ணெய் காப்பு அலங்கார சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பாண்டுரங்கர், மகாலட்சுமி, விடோபா தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சம்பூர்ண நாட்டியாலயா சார்பில் சிறுவர், சிறுமியரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (டிச.,28) காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், விட்டல் ரெகுமாயி பக்த சேவா பஜன் மண்டலி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, அனுமன் திருவீதி உலா நடக்கவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு, சம்பூர்ண நாட்டியாலயா சார்பில் சிறுவர், சிறுமியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.