மார்கழி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
ADDED :3516 days ago
ராமேஸ்வரம், மார்கழி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் முன்னோர்களுக்கு திதி பூஜை செய்தனர். மார்கழி அமாவாசை என்பதால் நேற்று தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின், கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு திதி பூஜை செய்தனர். தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் சென்று 22 தீர்த்தங்களில் நீராடிய பின் சுவாமி, அம்மனை தரிசித்தனர்.