உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி: பொள்ளாச்சி கோவில்களில் கோலாகலம்

அனுமன் ஜெயந்தி: பொள்ளாச்சி கோவில்களில் கோலாகலம்

பொள்ளாச்சி : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, ஆஞ்சநேயர் சன்னதிகளில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
பொள்ளாச்சி, கடை வீதியில் உள்ள, கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது; வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஜக்கார்பாளையத்தில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிபெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது, வடை மாலை, வெற்றிலை மாலை அலங்காரத்தில், ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, டிச., 26ம் தேதி காலை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று காலை, அனுமனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும், மதியம் கலை நிகழ்ச்சியும், மாலை, 5:30 முதல் 6:30 மணி வரை, அக்னி ேஹாத்ர தீட்சை வழங்கும் விழாவும் நடந்தது. பொள்ளாச்சி, அனுப்பர்பாளையம், பூமிநீளா தேவி சமேத மலைதாண்டியப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. கோவிலில் வளாகத்தில் உள்ள, சுயம்பு வீர ஆஞ்சநேயருக்கு, 16 வகை அபிேஷகம், ஆராதனையும், மலைதாண்டியப் பெருமாளின் உலகளந்த திருவடி பாதத்துக்கு சிறப்பு அபிேஷக பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !