உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா

வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் திருவிழா

வால்பாறை: வாழைத்தோட்டம் ஐயப்பன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலின், 57ம் ஆண்டு திருவிழா கடந்த, 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் டிச.,30 முன் தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை, 4.00 மணிக்கு ராஜீவ்காந்திநகர் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலிருந்து, பாலகொம்பு எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வால்பாறை நகரின் முக்கிய வீதிவழியாக பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக சென்றனர். விழாவில் டிச., 30 மாலை 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் கிருஷ்ணாஷ்சுதீர், செயலாளர் நடராஜ், பொதுசெயலாளர் தபசிமுத்து, பொருளாளர் சண்முகம் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !