உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2017ம் ஆண்டு நல்லபடியா இருக்கணும்.. அலைமோதிய பக்தர்கள்!

2017ம் ஆண்டு நல்லபடியா இருக்கணும்.. அலைமோதிய பக்தர்கள்!

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோவில் மற்றும் தேவாலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவாலயங்களில், சிறப்பு திருப்பலி நடந்தன. இதில், எண்ணற்றோர் பங்கேற்றனர். வடபழனி முருகன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், கந்தகோட்டம் முத்துகுமாரசாமி, நங்கநல்லுார் ஆஞ்சநேயர், தி.நகர் ஏழுமலையான் கோவில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட, சென்னையிலும், புறநகரிலும் உள்ள கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதேபோல் சாந்தோம், பரங்கிமலை, பாரிமுனை சர்ச் உள்ளிட்ட, பல கிறிஸ்தவ தேவாலங்களிலும், சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பலர், தங்கள் குடும்பத்தினரோடு பங்கேற்றனர். கோவில் மற்றும் தேவாலயங்களில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !