உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

துாத்துக்குடி: ஆங்கிலப்புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்துார் முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்துார் முருகன் கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாக கடற்கரையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடினர். ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம். காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிேஷகம், 9 மணிக்கு தீபாரதனை நடந்தது. இதில் பல பகுதிகளில் இருந்து நடை பயணமாக திருச்செந்துார் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு சாயரட்சை நடந்தது. புத்தாண்டு தினத்தன்று கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையான ஜன., 14 வரை தினசரி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். மற்ற தினங்களில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !