ஆண்டாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :3206 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் அதிகளவில் நேற்று வர துவங்கினர். உள்ளூர், வெளியூர் மற்றும் சபரிமலை செல்பவர்கள், திரும்புவர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் மாடவீதிகள், ரதவீதிகளில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தபட்டிருந்தன. பால்கோவா விற்பனையும் சூடுபிடித்தது. மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில், பெரியமாரியம்மன்கோயில், முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது.