வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு திருப்பலி
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பாடல் திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர், நேற்று முன்தினம் இரவு தேவாலயத்தில் குவிந்தனர். 2017ம் ஆண்டை வரவேற்கும் விதமாக, இரவு, 11:45 மணிக்கு, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, புத்தாண்டு பிறப்பையொட்டி, தேவாலயம் சார்பில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இரவு, 1:30 மணி வரை, நடந்த சிறப்பு பாடல் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.