அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3394 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் புத்தாண்டையொட்டி மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதேபோல், திருவரங்கத்தில் உள்ள பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலில் மூலவர் அரங்கநாதபெருமாளுக்கு புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.