உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் குண்டம் திருவிழா: சப் கலெக்டர் நேரில் ஆய்வு

பாரியூர் குண்டம் திருவிழா: சப் கலெக்டர் நேரில் ஆய்வு

கோபி: கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோயில், குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியுள்ளது. ஜன.,12ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோபி சப் கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். பூமிதிக்கும் பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடம், கழிப்பிட வசதி, விளக்கு வெளிச்ச ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில், தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் குளிக்க வசதியாக, இரு பாலருக்கும் தனித்தனியே, சவர் பாத் மூன்று இடங்களில், நிறுவுவதாக உத்தேசிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, சப் கலெக்டர் துறை ரீதியாக உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !