உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக்கவசத்தில் சோழவந்தான் ஐயப்ப சுவாமி அருள்பாலிப்பு

தங்கக்கவசத்தில் சோழவந்தான் ஐயப்ப சுவாமி அருள்பாலிப்பு

சோழவந்தான்: சோழவந்தான் சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் தங்கக்கவச அலங்காரத்தில் காட்சிதந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் மகரபூஜை தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் தந்த எலுமிச்சை, பூக்கள், பூஜைபொருட்களால் சரணம்கோஷம் முழங்க சுவாமிக்கு சிறப்பு தரிசனம் நடந்தது. மார்கழி உற்சவம் மகரபூஜையை முன்னிட்டு ஐயப்பசுவாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாககுழு தலைவர் வீரபத்திரன், நிர்வாகிகள் தனசேகரன், சேகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !