உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா

செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, செங்கமா முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. குமாரபாளையம் அடுத்த, பல்லக்காபாளையம் ஊராட்சி, செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா, கடந்த, டிச., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 5ல், உற்சவ பெரும்பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை, குமாரபாளையம் காவிரி ஆற்றிலிருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், முனியப்ப சுவாமி, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். (ஜன.,7) பொங்கல் விழா, (ஜன., 8) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, சுவாமியின் அருள் பெற வேண்டி, விழாக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !