செண்பகமாதேவி ஈஸ்வரர் கோவில் அபிஷேகம்
ADDED :3227 days ago
மல்லசமுத்திரம்: செண்பகமாதேவி ஈஸ்வரன் கோவிலில், வரும், 11ல், ஆருத்ரா அபிஷேக விழா நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட செண்பக ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு ருத்ரஹோமம் மற்றும் ஆருத்ரா அபிஷேகம் நடக்க உள்ளது. வரும், 11 அதிகாலை, 4:15 மணி முதல், வினாயகர், நவக்கிரஹ வழிபாடு, ருத்ரயாகம், ஆருத்ரா மற்றும், 108 சங்கு அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.