உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் சொர்க்க வாசல் திறப்பு

திருமலையில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நள்ளிரவு, 1:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் பங்கேற்றனர். நேற்று மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஏழுமலையானை தரிசனம் செய்ய, சொர்க்க வாசல் வழியாகச் சென்றனர். அதனால், தேவஸ்தானம் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தர்ம தரிசனத்தை துவக்கியது. சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வி.ஐ.பி., பிரேக், ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும், இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !