சிவகங்கையில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
சிவகங்கை: வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை 4:30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்துார்: நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்கழியும் மாதவனும் என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்தது. இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்தது. ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. சிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காளையார்கோவில்: காளையார்கோவில் சுகந்தவன பெருமாள் கோயிலில் காலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். சீனிவாசஐயங்கார் தலைமையிலான குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க, கோபூஜை, கெஜபூஜை, சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. காலை 6:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. மாலை 3:30 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். இரவு திருக்கானப்பேரூர் கலைக்களங்சியம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.