ராதா கல்யாண மஹோத்ஸவம்
ADDED :3232 days ago
கோவை : வாழ்க்கை படிநிலைகளில், பின்பற்ற வேண்டிய பண்புகளை உணர்த்தும், ராதா கல்யாண மஹோத்ஸவம் விழா நேற்று நிறைவடைந்தது. ஆஸ்திக சமாஜம் சார்பில், இடையர்பாளையம், வி.ஆர்.ஜி., மஹாலில், 13ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு, லட்சுமி நரசிம்ம வாத்யார் குழுவினரால், வேத பாராயணம் பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து, 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி; 9:00 மணிக்கு, சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் குழுவினரின், ராதா கல்யாண மஹோத்ஸவம் மற்றும் ஆஞ்சநேய உத்ஸவம் பஜனை பாடல்களும் பாடப்பட்டன. இந்நிகழச்சி, மனிதர்கள் தங்களின் வாழ்க்கை படிநிலைகளில், கடைபிடிக்க வேண்டிய முக்கிய பண்புகளை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.