பம்பா சங்கமம் துவக்கம்
ADDED :3232 days ago
சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க கோரி பம்பையில் நேற்று தொடங்கிய பம்பா சங்கமம் நிகழ்ச்சியை கேரள கவர்னர் சதாசிவம் தொடங்கி வைத்தார்.பம்பை ராமமூர்த்தி மண்டபத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை வகித்தார். கவர்னர் சதாசிவம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தேவசம்போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் வரவேற்றார். கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், உட்பட பலர் பங்கேற்ற னர். இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட ௫ மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வர்.