உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி விகரம பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

சீர்காழி விகரம பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28வது தலமான ஸ்ரீ விகரம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோ யிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுது. இதனை முன்னிட்டு பெருமாள் ரத்திண அங்கி அலங்காரத்தில் கோ யில் மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 5:30மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்ப ட்டு அங்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியையும் சேவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !