மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :3232 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 22வது தலமும், பஞ்சரங்கத்தில் ஐந்தாவது தல முமான ஸ்ரீ பரிமள ரங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு நேற்று காலை சிறப்பு திரு மஞ்சனம் நடைபெற்றுது. பெருமாள் ரத்திண அங்கி அலங்காரத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அ திகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அங்கு தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரெங்கநாதா, ரெங்கநாதா என கோஷமிட்டு பெருமாளை சேவித்தனர்.