ஆருத்ரா தரிசனம்: உத்திரகோசமங்கையில் கோலாகலம்
ADDED :3374 days ago
ராமநாதபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு கலைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் மரகத நடராஜருக்கு, காலை சந்தனம் கலையப்பட்டது. ஆண்டு முழுவதும், நடராஜர் சிலை சந்தனக்காப்புடனேயே இருக்கும். ஆருத்ரா தரிசன நாளில், மட்டும் சந்தனம் கலையப்படும், அதன்படி, இன்று நடராஜர் சிலை சந்தனம் கலையப்பட்டு, நடராஜருக்கு 18 வகை அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.