திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை தரிசிக்க ரூ.10 கட்டணம்
ADDED :3233 days ago
திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசன கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.இதன் நகர துணைத்தலைவர் வீரதிருமூர்த்தி தெரிவித்ததாவது: கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது. விலை வாசி உயர்வு, டிக்கெட் புத்தகம் அச்சிடும் செலவுகள் அதிகம் இருப்பதால், ஜன.1 முதல் சாமி தரிசன கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்த அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாமி தரிசன கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், என தெரிவித்தார்.