உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை திரளான பக்தர்கள்

அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை திரளான பக்தர்கள்

மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மஞ்சூர் அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான கிருத்திகை பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 11:00 மணிக்கு பால், தயிர், பன்னீர் என 12 அபிஷேகங்கள், முருக பெருமானுக்கு செய்யப்பட்டது. பின் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !