உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மயிலாடுதுறை ; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்  கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான கோயிலாக விளங்குகிறது. இங்கு உள்ள 3 தீர்த்தங்களில் நீராடி சுவாமியை வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோம வாரத்தை யொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் சுவேதாரண்யேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றதுது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !