செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா
ADDED :221 days ago
செஞ்சி; செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
செஞ்சி அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள்-செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள சொக்கநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சியம்மன் மற்றும் சனி பகவான், சனி பகவான் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், 7 மணிக்கு சிறப்பு வேள்வியும் நடந்தது. கும்ப ராசியிலிருந்து சனி பகவான் மீன ராசிக்கு இடம் பெயர்ந்த காலை 8.26 மணிக்கு மோனசித்தர் தலைமையில் சிறப்பு அர்ச்சனையும் மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் சனி பகவான் கோவில் உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.