பழநி முருகன் கோயிலில் யானை பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி
ADDED :13 hours ago
பழநி; பழநி முருகன் கோயிலில் யானை பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சுக்கு காபி வழங்க துவங்கப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயிலில் வெளி மாநில, மாவட்ட, வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் தினமும் வந்து செல்கின்றனர் பெரும்பாலான பக்தர்கள் யானை பாதை, படிப்பாதைகளில் நடந்து மேலே ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்வர். இவர்களுக்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் மோர், சுக்கு காபி கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவும் குளிர் அதிகரிக்கும் நிலை இருக்கும். எனவே கோயில் நிர்வாகம் இன்று முதல் சுக்கு காபி பக்தர்களுக்கு இலவசமாக வழங்க தொடங்கியுள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் சுக்கு காபி வாங்கி அருந்தி சென்றனர்.