/
கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோவிலில் கார்த்திகை மாதப்பிறப்பு சிறப்பு பூஜை; வெள்ளிக் கவசத்தில் விநாயகர்
பழநி முருகன் கோவிலில் கார்த்திகை மாதப்பிறப்பு சிறப்பு பூஜை; வெள்ளிக் கவசத்தில் விநாயகர்
ADDED :221 days ago
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி கோயிலில் விசுவாவசு ஆண்டு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.