பு.புளியம்பட்டி பாலசாஸ்தா கோவில் 5ம் ஆண்டு விழா
ADDED :3235 days ago
புன்செய்புளியம்பட்டி: பாலசாஸ்தா கோவில் ஐந்தாம் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புன்செய்புளியம்பட்டி, அன்னமடம் வீதியில், நூற்றாண்டுகள் பழமையான முத்துவிநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், பாலசாஸ்தா அய்யப்பனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கும்பாபிஷேகம் நடந்து, ஐந்து ஆண்டுகள் ஆனதையொட்டி, ஆண்டு விழா மற்றும் அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. இரவில் கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, பச்சப்புள்ள பவளப்புள்ள குழுவினரின், பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், இருமுடி கட்டி, குருசாமி செல்லதுரை தலைமையில்,
சபரிமலைக்கு புறப்பட்டனர்.