பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3235 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவபெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்களால் கருதப்படுவது பிரதோஷ தினமாகும். மாதம் இரு முறை வரும் இந்நாளில், பிரதோஷ காலமான மாலை, 4:306:00 மணியளவில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வளர்பிறை பிரதோஷமான நேற்று, பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு அம்மணீஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், பட்டணம் சிவன் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவன், அம்மன், நந்திக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. திருவீதியுலா, அலங்கார பூஜைகள் இடம்பெற்றன. வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.